Header Ads



இது அநுரகுமாரவின் கவலை


புதிய அடக்குமுறை சட்டத்தை கொண்டு வரும் ரணில் விக்ரமசிங்க, கடந்த காலத்திலும் பெயரளவில் மாததிரம் ஆயிரக்கணக்கான பக்கங்களை விரயமாக்கி,அரசியலமைப்புச் சட்டவரைவை மட்டுமே உருவாக்கினார் என தேசிய சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து ஆயிரணக்கான பக்கங்கள் நிரப்பட்டன. எனினும் இறுதியில் முடிவுகள் பூஜ்ஜியம்.


நாட்டு மக்கள் எப்போதும் அரசியல்வாதிகளின் அலங்கார பேச்சுக்களை நம்பி ஏமாற்றமடைவது பொது அடையாளமாக இருந்து வருகிறது.


சிறிய சிறிய சட்டங்களின் மூலம் நாட்டை மறுசீரமைக்கவோ, ஊழல்களை நிறுத்தவோ முடியாது.


பொது மக்களிடம் அதிகாரம் கைமாறுவதன் மூலம் மாத்திரமே நாட்டில், ஊழல்,மோசடிகள் மற்றும் வீண் விரயங்களை நிறுத்த முடியும்.


குறிப்பாக இதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின்ஆதரவு அவசியம்.


சிலர் வடக்கை மையமாகவும் சிலர் தெற்கை மையமாகவும் கொண்டு அரசியலில் ஈடுபடுகின்றனர்.


தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அனைத்து மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் அரசியலை முன்னெடுக்க முடியும்.


வடக்கில் நீடித்த யுத்தம் இருந்தது.ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன.


பிள்ளைகளை இழந்த தாய்மார் பிள்ளைகள் திரும்பி வரும் வரை காத்திருக்கின்றனர். கணவன்மாரை இழந்த பெண்கள் இருக்கின்றனர்.


பி்ள்ளைகளை இழந்த தாய்மார் இருக்கின்றனர்.சோகம் நிறைந்த வடக்கே இருக்கின்றது.எமது நாட்டில் நீண்டகால தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களே இருக்கின்றனர்.


இந்த அரசியல் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் இன்னும் தொடர்கின்றது.மக்கள் எப்போதும் அரசியல்வாதிகளிடம் ஏமாறுகின்றனர்.


இப்படியான ஏமாற்று நடவடிக்கைகள் மூலம் நாட்டை எப்போதுமே கட்டியெழுப்ப முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.