Header Ads



ஒவ்வொரு இலங்கையரும் கோத்தபாயவினால், இழந்த பணத் தொகை


கோத்தபாய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் ஒவ்வொரு இலங்கையர்களும் 359,000 ரூபாவை இழந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 8 வீத கடன் வட்டியை செலுத்தாவிடின் கடன் 2030 இல் இரட்டிப்பாகும் எனவும் 43 ஆவது பிரிவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், நாட்டில் பொருளாதார குற்றவியல் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென தெரிவித்த ரணவக்க, நிதி ஒப்பந்தப் பத்திரம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் மட்டும் அதற்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கான கட்டளைகள், கொள்முதல் செயல்முறையை சரிசெய்வதற்கான கட்டளைகள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான கட்டளைகள் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் தொடர்பான தனியான சட்டங்களை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


2019 கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 89 பில்லியன் டொலர்களாக இருந்த போதிலும் 2020 இல் 85 பில்லியன் டொலர்களாகவும் 2022 இல் 75 பில்லியன் டொலர்களாகவும் குறைந்தது , மேலும் 2020 முதல் 2030 வரை கோத்தபாய ஆட்சியில் இல்லை என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 123 பில்லியன் டொலர்களாக இருந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.