இலங்கையரின் வீரதீர செயல் - பாராட்டும் மக்கள்
கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை இளைஞன் ஒருவர் தடுத்துள்ளார்.
அதாவது உடுதும்புற பாரிய வளைவில் பேருந்தை செலுத்தும் பொழுது சாரதி கதவு திறக்க வெளியே விழுந்துள்ளார்.
சாரதி இல்லாமையால் பேருந்து பள்ளத்தில் வீழச் சென்ற நிலையில் அங்கிருந்த இளைஞன் காப்பாற்றியுள்ளார்.
குறித்த இளைஞன் உடனடியாக சாரதியின் கதிரையில் குதித்து பிரேக் ஐ அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அதிகளவான பயணிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டையடுத்து குறித்த இளைஞனை பேருந்தில் இருந்த அனைவரும் பாராட்டியுள்ளனர்.
மிகப் பெரிய அழிவிலிருந்து பயணிகளைக் காப்பாற்ற உதவிய இந்த வாலிபனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.
ReplyDelete