வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் ஜனாஸா மீட்பு
4ம் திகதி வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் நீர்கொழும்பு கட்டான தொகுதிகளின் எல்லையை ஊடருத்துச் செல்லும் "தெபாஎல" பெருக்கெடுத்ததில் வெள்ளம் ஏற்பட்டு ஓடையில் நீர் வேகமாக பாய்ந்தோடுகின்றது.
பெரியமுல்லை, செல்லகந்த வீதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் செல்லும் போது இவர் செல்லும் வழியில் பாலத்தை கடக்கும் போது வேகமாசெல்லும் வெள்ள நீருக்கு அடிபட்டுச் சென்றுள்ளார்.
இதனை தூரத்திலிருந்த சிலர் கண்டுள்ளதாக தெரிய தருகின்றது.
பொலிஸ், கடற்படை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதல் நடாத்தினர்.
சனிக்கிழமை மாலை கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மேலதிக பணிப்பாளர் அஜித் நிஸான்தவின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த கடற்படையின் சுழியோடி பிரிவினர் ஓடையில் இறங்கி தேடுதல் நடாத்தினர்.
வெள்ளத்திற்கு அடிபட்டுச் சென்ற பாலத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தூரம் நீர் ஓடையில் சுழியோடி தேடுதலில் ஈடுபட்டபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் தேடும் முயற்சியை கைவிட்டுச் சென்றனர்.
60 வயது மதிக்கத்தக்க மொகமட் சலீம் மன்சூர் என்பவரே காணாமல்போனார். இவருக்கு ஒரு பெண் பிள்ளையும் மூன்று ஆண்களும் உள்ளனர்.
இவரை கண்டுபிடிப்பதில் ஊர் இளைஞர்கள் தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் "பக்கோ" இயந்திரத்தை பயண்படுத்தியும் தேடுதல் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இவர்களின் முயற்சிக்கு மாலை 3.40 மணியாகும் போது பயன்கிடைத்தது. சடலம் நீீீ்கொழும்பு தழுப்பொத்த பகுதியில் ஓடையின் ஒரத்திலிருந்து தேடுதலில் ஈடுபட்ட வாலிபர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் சடலம் வெளியே எடுக்கப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment