முஜிபுர் ரஹ்மானுக்கு புதிய பதவி
ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுவின் அனுமதியுடன், அக் கட்சியின் இரண்டு பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் பிரதி செயலாளராக முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதங்கள், கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment