Header Adsதங்கத்தின் விலையில் வீழ்ச்சி


கடந்த வாரத்துடன்  ஒப்பிடுகையில், இந்த வாரம் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடையக் கூடும் என தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி இன்றைய தினம்(02.05.2023) தங்க அவுன்ஸின் விலை 638,260 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,520 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,710 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 157,650 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.       

No comments

Powered by Blogger.