Header Ads



வாயை பிளக்க வைத்துள்ள, சுந்தர் பிச்சையின் சம்பளம்


கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூகுள் தெரிவித்துள்ளமை நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது.


நிதி பற்றாக்குறையை காரணமாக கூறி, ஊழியர்களுக்கான சலுகைகள் பெருமளவு குறைக்கப்பட்டு, 12 ஆயிரம் ஊழியர்கள் கூகுளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.


இந்த நிலையில், சுந்தர் பிச்சை மற்றும் மற்ற பணியாளர்களின் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் ஊழியர்களிடையே புயலை கிளப்பியுள்ளது. சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகமாக சுந்தர் பிச்சை ஊதியம் பெற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதோடு கூகுள் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பக்கங்களில் இது குறித்த கருத்துகளும், மீம்ஸ்களும் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.


நிதி சேமிப்பு ஊழியர்களிடம் மட்டுமே தவிர, கடினமாக உழைக்கும் சிஇஓ மற்றும் நிறுவன துணைத் தலைவர்களுக்கு இல்லை என ஊழியர்கள் குமுறியுள்ளனர்.


அத்துடன் கடந்த 2021-ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை 2,200 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  


அதேவேளை ஆப்பிள் சிஇஓ டிம் குக் கடந்த ஆண்டு தனது ஊதியத்தில் 40 சதவீதத்தை குறைத்துக் கொண்டதையும் கூகுள் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comment:

  1. சுந்தர் பிச்சையின் சம்பளத்தைப் பற்றி பேச முன் சுருக்கமாக அவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்க ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் கணணி, தொழில்நுட்பத்துறையில் முதலாம் தரத்தில் சித்தி யெய்தி, பல புதிய ஆக்கங்களை உலகுக்கு வழங்கி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினதும் உலக கணணி தொழில்நுட்பத்துறையில் உலக சாதனை படைத்தவர். அவருடைய திறமையையும் அபார ஆற்றலையும் மதித்த கூகல் அவருடைய தகைமைக்கும் ஆற்றலுக்கும் இசைவான சம்பளத்தையும் ஏனைய வசதிகளையும் வழங்குகின்றது. அதற்குச் சமாந்திரமாக அவருடைய திறமை அனுபவத்தைப் பயன்படுத்தி கூகுல் கோடான கோடி டொலர்களைச் சம்பாதிக்கின்றது. சுந்தர் பிச்சையின் சம்பளம் பற்றிப் பேசும் இவர்கள் நானும் ஒரு நாள் சுந்தர்பிச்சையின் பதவிக்கு வருவேன் என சவால்விட்டு தான் அவரைவிட கணணி தொழில்நுட்பத்தில் முன்னேறுவேன் என முன்வந்தால் அது அவருக்கும் உலகில் பல நிறுவனங்களுக்கும் நன்மையாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.