காப்புறுதி பணத்திற்காக கொலை
சந்தேக நபரின் மனைவி ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு ஆயுள் காப்புறுதிகளை எடுத்துள்ளதாகவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்காக இவ்வாறு கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை வேண்டுமென்றே கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபரின் நண்பரை கைது செய்ய பிடிகல பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான கணவரும் அவரது நெருங்கிய நண்பரும் மனைவி வாகன விபத்தில் இறந்துவிட்டதாக நம்ப வைக்கும் வகையில் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி ஆடைத் தொழிற்சாலை ஊழியர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பிடிகல பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மனைவியை கொன்று விபத்து என்று காப்புறுதி நிறுவனத்திடம் நிரூபித்து காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளவே கணவர் இதுபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
வத்தஹேன, தியாகிதுல்கந்த பகுதியைச் சேர்ந்த நாற்பது வயதுடைய வன்னியாராச்சிலாகே நிரோஷா உதயங்கனி என்ற ஆடைத் தொழிற்சாலை ஊழியரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் வேலையற்ற இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment