Header Ads



6 பில்லியன் டொலர் வேண்டும், இலங்கையின் வழக்கை ஒத்திவைத்த சிங்கப்பூர் நீதிமன்றம்


இலங்கையின் சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


அதன்படி குறித்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு நேற்றைய தினம் (09.05.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் சிங்கப்பூரில் உள்ள ஒரு சட்ட நிறுவனம் இலங்கையின் சார்பில் முன்னிலையாகியுள்ளது.


சேதத்துக்காகக் கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.2 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரியே சிங்கப்பூர் நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்தநிலையில், எதிர்காலத்தில் சரியான இழப்பீடு தொகை குறித்து சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இலங்கை அறிவிக்கவுள்ளது.


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே 20ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த நிலையில் தீப்பற்றிக்கொண்டது.


பின்னர் அதனைக் கட்டுப்படுத்தமுடியாமல், கொழும்பு கடலிலேயே அது மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.