Header Ads



400 வைத்தியர்கள் தலைமறைவு, உடன்படிக்கையும் மீறல் - சுகாதாரத் துறையில் சிக்கல்


சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு மேலதிக பயிற்சிகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அரசாங்க மருத்துவர்களில், சுமார் 400 பேர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


அவ்வாறு சென்றுள்ளவர்களில் 67 விசேட மருத்துவ நிபுணர்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன:  


சுகாதாரத்துறையில் மேலதிக பயிற்சிகளுக்காக டாக்டர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவது வழக்கம்.


அவ்வாறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 400 மருத்துவர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை. அத்துடன் இந்த வருடத்தில் மாத்திரம் இப்பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றிருந்த 67 விசேட மருத்துவ நிபுணர்களும் இதுவரை மீண்டும் நாடு திரும்பவில்லை. குறிப்பாக சுகாதார அமைச்சுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்ட பின்னரே, மருத்துவர்கள் பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்கின்றனர்.


அவ்வாறு கடந்த காலங்களில் உடன்படிக்கைகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விசேட மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலானோர், மீண்டும் நாட்டுக்கு திரும்பாததால் சுகாதாரத்துறையில் சிக்கல் தோன்றுவதாக தெரிவித்தார்.


 லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.