தாயும் 2 பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு
வென்னப்புவ பிரதேசத்தில் தாயும் இரண்டு பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாக தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 7 நாட்களாக மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணாமல் போயுள்ளதாக என அவர் பொலிஸிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வென்னப்புவ பிரதேச சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாயாரின் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாகவும் பல விபரங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment