2000 ரூபாய் நோட்டுகளை இருந்து திரும்பப்பெற முடிவு - 4 முக்கிய குறிப்புக்கள்
அதே சமயம், அந்த ரூபாய் நோட்டு செப்டம்பர் 30ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் நோட்டுகளின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இதன் பிறகு இந்திய பொருளாதாரத்தின் நாணய தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தின் 24(1) பிரிவின் கீழ் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையை வெள்ளிக்கிழமை மாலையில் ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. முன்னதாக, 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில் சுமார் 89% 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்தது. சதவீத அளவில் இது 10.8 மட்டுமே.
இந்நிலையில், மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள 2,000 நோட்டுகள், பரிவர்த்தனைகளுக்கு பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பே போதுமானதாக உள்ளது என்பது தெரிய வந்தது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “கிளீன் நோட் பாலிசியின்படி”, ₹2000 மதிப்புடைய நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
* பொதுமக்கள், 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.
* எந்த வங்கிக் கிளையிலும் கணக்குகள் மற்றும்/அல்லது அவற்றை மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
* வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
* செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23 முதல் எந்த வங்கியிலும் பொதுமக்கள், ₹2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். BBC
Post a Comment