2 பஸ்கள் மோதல் - 23 பேர் காயம்
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இன்று -05- இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்களும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ்ஸின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
Post a Comment