Header Ads



10 செல்வந்த வர்த்தகர்களின், கடன்களை ரத்துச்செய்த ரணில் - பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம குற்றம்சாட்டியுள்ளார். 


நாடாளுமன்றில் வைத்து உரையாற்றும் போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில், தனக்கு மிகவும் நெருக்கமான பத்து செல்வந்த வர்த்தகர்களின் கடன்களை அறவிட முடியா கடனாக அறிவித்து தள்ளுபடி செய்துள்ளார்.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட போது நான் ஆதரவு வழங்கினேன். எனவே ஏதேனும் பிழைகள் நடந்தால் அதனை சுட்டிக்காட்ட தயங்கப் போவதில்லை.


செல்வந்த வர்த்தகர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு நாம் அவருக்கு வாக்கு வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. ஒரு நாட்டுத் தலைவர் செய்யக்கூடாத மிக மோசமான செயல் இது. பொதுமக்களி்ன பணத்தை முதலாளிகள் விழுங்கிவிட ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த அநியாயத்துக்கு எதிராக தனிமனித அடிப்படை உரிமை மீறல் என்ற வகையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதவு செய்து பொதுமக்களின் வங்கிப்பணத்தை உடனடியாக திருப்பிச் செலுத்த நீதிமன்றக்கட்டளையைப் பெறவேண்டும். இதற்காக நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட யாரும் முன்வருவார்களா?

    ReplyDelete

Powered by Blogger.