Header Ads



மேலும் 100 Mp க்களின் வீடுகளுக்கு, தீ வைக்க திட்டமிட்டிருந்தார்கள்

கடந்தாண்டு மே மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகளின் 100 வீடுகளுக்கு தீ வைக்க திட்டமிடப்பட்டதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அத்தகையோரை ஆயுதப்படைகள் கண்டால் சுட உத்தரவிடப்பட்டதால் இந்தத் திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் இன்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மே 10 ஆம் திகதி தீவைக்க 100 வீடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சில ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


“தகவல் அறிந்ததும், பாதுகாப்புச் செயலாளருக்குத் தெரிவித்தோம், கண்டால் துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படையினருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தோம். அவர்கள் மூன்று துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். ரத்கமவில் ஒன்று, அங்கொட மற்றும் கோட்டையில் இரண்டு. இந்த மூன்று துப்பாக்கிச் சூடுகளும் நடந்திருக்காது. குறைந்தது 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு இருக்கும்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியல் மூலம் மே 9 ஆம் திகதி அழிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.