Header Ads



மஹ மொலகரு எங்கே...? நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

 

- Ismathul Rahuman -


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நான்கு ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 21 திகதி நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி சக்தியில் "நீதி கிடைக்கும் வரை நாம் விழிப்புடன்" எனும் தொனிப்பொருளில் மக்கள் சங்கிளி போராட்டம் இடம்பெற்றது. 


நீர்கொழும்பில் கத்தோலிக்க தேவஸ்தானங்களிலிருந்து வருகைதந்த மக்கள் கொழும்பு புத்தளம் பிரதான வீதியின் இரு மறுங்கிலும் நீண்ட தூரத்திற்கு  ஒன்றுதிரண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையும் நீதியும் வேண்டினர். 


ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு 4 வருடங்கள்  மக்களின் பட்டினியை ஆட்சியாளர்கள் உனரமாட்டார்களா?,  நீதியை நிலைநாட்டுங்கள், மஹ மொலகரு(சூத்திரதாரி) எங்கே? உயிர்த ஞாயிறு ஆணைக்குழுவின் பரிந்துறைகள் அரசுக்கு தென்படவில்லையா? போன்ற சுலோகங்களை மக்கள் ஏந்திநின்றனர். தாக்குதல் இடம்பெற்ற சரியாக 8.45 மணிக்கு 2 நிமிடங்கள் மெளன அன்ஞளியும் இடம்பெற்றன



1 comment:

  1. மஹமொலகரு என அப்படி ஒன்றும் இல்லையாம். அந்த குண்டுகள் தானாகவே வெடித்திருக்கலாம் மற்றொரு புலனாய்வுத் தகவல் கூறுகின்றது என நாடகம் முடிவடையும்.

    ReplyDelete

Powered by Blogger.