Header Ads



நோன்புடன் உம்ராவை நிறைவேற்றிய போது, இறைவனின் பக்கம் சென்ற உயிர் - கணவரின் உருக்கமான வார்த்தைகள்


படங்களில் கடந்த வாரம் நோன்பு நோற்ற நிலையில் உம்ராவை நிறைவேற்றும் போது கஃபாவுக்கு அருகில் மரணித்த எகிப்தைச் சேர்ந்த ஹிபா என்ற பெண்ணையும் அவரது ஜனாஸாவையும் காண்கிறோம்.


மரணித்த அவரது உடல் பல லட்சக்கணக்கான நோன்பாளிகளின் ஜனாஸா தொழுகையைத் தொடர்ந்து மக்காவில் ஷராயிஃ எனும் இடத்தில் சென்ற வாரம் 3வது நோன்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இன்று வைரலாகியிருப்பது அவரது மரணத்தின் பின் அவர் பற்றி அவரது கணவர் எழுதியுள்ள உருக்கமான இந்த  வார்த்தைகள்தான்...  


மரணித்த ஹிபா சிறந்த மனைவியாக, தாயாக, சகோதரியாக வாழ்ந்து மரணித்துள்ளார் என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி...


[அல்லாஹ்வுக்கே அவன் வழங்கிய அனைத்தும் உரியது. அவனுக்கே அவன் திருப்பி எடுத்தவையும் உரியது.


இறைவனிடம் நற்கூலிகளை எதிர்பார்த்து, பொறுமையான உள்ளங்களுடன் எனது மனைவியின் மரணச் செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.


என் மனைவி என் ஆத்ம துணை...


அவள் எனது தோழி... 


என் இதயத்தில் வாசம் வீசும் மலர்... 


எனது  நலவு,புன்னகை, என் தனிமையைப் போக்கும் தோழியென எல்லாமாக அவள் இருந்தாள்.


அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சொல்கிறேன். உண்மையில் அவள் மிகச்சிறந்த மனைவியாக இருந்தாள்.


தன் குடும்பத்தினருக்கும், தனது கணவனது குடும்பத்தினருக்கும் பணிவிடை செய்பவளாக இருந்தாள். என் தாய்க்குப் பின் தாயாக, சகோதரிக்கு சகோதரியாக இருந்ததுடன் அதிகம் நோன்பு நோற்பவளாக, அதிகம் நின்று வணங்குபவளாக இருந்தாள்.


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையிலும் உம்ராவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவரது உயிர் இறைவனின் பக்கம் சென்றிருக்கின்றது. நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புவோம்.


அல்லாஹ் என் மனைவியை மன்னித்து கருணை காட்டுவானாக, அவளுக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக.

✍️✍️✍️

எவ்வளவு பெரிய ஈமானிய வார்த்தைகள்...


அப்பெண்ணின் கணவர் மீதான அன்பு, குடும்ப உறவுகள் மீதான பாசத்தை மிகத்தெளிவாக உணர்த்தும் வரிகள்.


தொழுகை, நோன்பு போன்ற மார்க்கக் கடமைகளை பின்பற்றி நடக்கும் அப்பெண்ணின் உயரிய குணம் நன்றாகவே புலனாகிறது.


நாமும் அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம்.


- பாஹிர் சுபைர் -




No comments

Powered by Blogger.