Header Ads



கோட்டாபயவிற்கு அரசாங்கம் செலவிடும் மாதாந்தப் பணம் எவ்வளவு தெரியுமா..?


ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மாதாந்தம் பதின்மூன்று இலட்சத்து இருபத்தொன்பதாயிரத்து முந்நூற்று எண்பத்தேழு ரூபாய் (ரூ. 13,29,387) அரசாங்கத்தினால் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் செலவுகள் குறித்து கடந்த காலத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.


இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியிடம் தகவல் கோரிக்கை ஒன்றை முன்வைத்த FactSeeker அமைப்பு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  சார்பில் அரசாங்கத்தின் மாதாந்த செலவீனங்கள் எவ்வளவு? என வினவியிருந்தது.


விண்ணப்பத்திற்கான பதில் கடிதமானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே.ஹேனாதிரவின் கையொப்பத்துடன் பெறப்பட்டது.


கிடைக்கப்பெற்ற பதில் கடிதத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளர் கொடுப்பனவுகள் என்பவற்றுக்கான செலவுகளாக 9,91,000 ரூபாயும், தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் பிற செலவுகளுக்காக 3,38,387.60 ரூபாயும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உரிய திணைக்களத்திடம் இது தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் கிடைத்தவுடன் பதில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் ஏனைய தொடர் செலவுகள் அடங்கிய செலவீன அறிக்கை ஒரே செலவீன பட்டியலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனித்தனியாக வழங்க முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. ஓய்வுபெற்ற சானாதிபதிக்கு ஓய்வூதியம் வழங்குவது சட்டத்திலிருந்தால் அதுபற்றி பொதுமக்களுக்கு எதிர்க்க முடியாது. ஆனால் அந்த சட்டத்தை மாற்றுமாறு அராங்கத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க முடியும். ஆனால் இந்த ஆசாமி ஒய்வுபெறவில்லை. பதவியைவிட்டு விட்டு ஓடியவன். அரச அதிகாரிகளின் சட்டப்படி பதவியை விட்டு ஓடியவன், பதவியிலிருந்து அகற்றப்பட்டதற்குச் சமம். அவருக்கு எந்த கொடுப்பனவுகளும் அரசாங்கத்திலிருந்து பெறுவதற்குத் தகுதியோ அருகதையோ இல்லை. அப்படியானால் என்ன சட்டப்படி இந்த ஆசாமிக்கு பொதுமக்களின் பணத்திலிருந்து செலவு செய்யப்படுகின்றது. ஆனால் இந்த கொடுப்பனவுகள் அனைத்தையும் இதனைச் செலுத்துபவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்களிடமிருந்து மீளப் பெற பொதுமக்கள் வழக்குகள் பதிவு செய்வார்கள் .அது நிச்சியமாக நடைபெறும். பொதுமக்களின் பணத்தை சட்டத்துக்கு முரணாக செலவு செய்யும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்பதை உரியவர்கள் ஞாபகம் வைத்திருந்தால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.