ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்த பெண் உயிரிழப்பு
இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணும் வயோதிப தயார் ஒருவரும் சிலாவத்தை பகுதியில் இருந்து கொக்குளாய் செல்லும் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த வெளிநாட்டு பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் சிலாவத்தை பகுதியினை சேர்ந்த ஜேர்மனியில் வசித்துவரும் 42 வயது சறீதர் ஜெனிற்றா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் வெளிநாட்டில் இருந்து தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டுவிழா செய்வதற்காக சொந்த இடமான முல்லைத்தீவு – சிலாவத்தைக்கு வந்துள்ள நிலையில் இந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.
Post a Comment