Header Ads



இலங்கையில் உடனடியாக சீனா மேற்கொள்ளவுள்ள திட்டம்


இலங்கையில் சீனாவின் முதலீட்டில் நாளாந்தம் 4 டொன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கக்கூடிய புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.


நேற்று (27) பிற்பகல் இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மஹா நாயக்கர்களை சந்தித்த பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


இந்நாட்டில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அறுபதுகளில் கட்டப்பட்ட மிகவும் பழமையானது என்பதால், புதிய தொழில்நுட்பத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை உடனடியாக திறக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த சீன தூதுவர், இந்த ஆண்டு 120 முதல் 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.