Header Ads



முஸ்லிம் அல்லாதவர்களின் மனதைத் தொடும் கருத்துக்களும், பூனைக்கு இரக்கம் காட்டிய இமாமும்


அமெரிக்க சிஎன்என் சேனல் தனது இன்ஸ்டாகிராமில் அல்ஜீரிய இமாம் வாலித் மஹ்சாஸ் தராவீஹ் தொழுகையில் தன்மீது பாய்ந்து வந்து விளையாடிய பூனையிடம் கருணையுடன்  நடந்து கொண்ட வீடியோவை வெளியிட்டது


அது தொடர்பாக முஸ்லிம் அல்லாதவர்களின் கருத்துக்கள் அழகாகவும் மனிதாபிமானமாகவும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி மக்கள் மனதில் பதிந்துள்ள தெளிவான மாற்றத்தை இது பிரதிபலிப்பதாக இருக்கிறது


மனதைத் தொடும் கருத்துக்களில் சில:


முஸ்லிம்களின் மனிதாபிமானத்தையும் பூனையும் உணர்ந்துள்ளது.


என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஆனால் மிக அழகு


கடவுளே, இது என் கவலைகளை நீக்கியது, என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்


அந்த தொழுகையின் சக்தியை நான் உணர்கிறேன்


நான் கிறிஸ்தவன்தான், ஆனால் நான் இஸ்லாத்தை மிகவும் மதிக்கிறேன்.


நான் கத்தோலிக்கன் ஆனால் நான் இஸ்லாத்தை போற்றுகிறேன்...


இப்படி பல அழகான கருத்துக்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சுக்கு முன் உங்கள் செயல்களால் உங்கள் மார்க்கத்தின் தோற்றத்தை வெளிப்படுத்துகிறீர்கள். நல்ல செயல்களையும், நல்ல வார்த்தைகளையும் கடைப்பிடிப்போம்


அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவ்வாறு செய்தால் லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாமை நோக்கி வருவதைக் காண்பீர்கள்


--அஷ்ஷைக் ராத்திப் அந்நாபிலிஸி


இஸ்மாயீல்நாஜிபாஜில்மன்பயீ

No comments

Powered by Blogger.