இலங்கையில் இளவரசியாக முடிசூட்டப்பட்ட ஜேர்மனிய பெண்
சிங்கள தமிழ் புத்தாண்டு உதயமானது. புத்தாண்டின் சுப வேளைகளில் நாடு முழுவதும் சடங்குகள் செய்யப்பட்டன.
புத்தாண்டையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதேவேளை, வெளிநாட்டவர்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டம் களுத்துறை ரோயல் பார்ம் ஹோட்டலில் நடைபெற்றது.
தலையணை மல்யுத்தம், கயிறு இழுத்தல், பன் உண்ணுதல், கானாமுட்டி உடைத்தல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ் எம்மா கிரேர் புத்தாண்டு இளவரசியாக முடிசூட்டப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment