Header Ads



ஸ்ரீலங்கா என்ற பெயரை உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை - என்ன காரணம்..?


ஸ்ரீலங்கா என்ற பெயரில் "ஸ்ரீ" என்ற எழுத்தில் திடமான பொருத்தம் இல்லாததால் வரலாறு முழுவதும் எதிர்மறையான விளைவுகளை நாடு அனுபவிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஞ்ஞானம் மற்றும் வானியல் ஆய்வாளரும் நிபுணருமான அனுர சி. பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,


“இன்று நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆகையினால் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தேன்.


நாட்டிற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 1956ம் ஆண்டுக்கு பின்னரே ஸ்ரீ என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


ஶ்ரீலங்கா என்ற பெயரை பாவித்த அரச நிறுவனங்கள் உட்பட அரசியல் கட்சிகள் கூட வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினைக்கும் ஸ்ரீ என்ற எழுத்து காரணமாக இருந்துள்ளது.


இதனால் நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதனையடுத்து ஸ்ரீலங்கா என்ற பெயரிலிருந்து ஸ்ரீ என்ற எழுத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக ஶ்ரீ இல்லாமல் லங்கா, செலான், செரண்டிப் என நாட்டிற்கு பெயரிடப்பட்ட போது நாடு செல்வச்செழிப்புடன் இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.