Header Ads



திருமண விழாவில் புகுந்து மணமகன் மீது ஆசிட் வீசிய பெண் - காரணம் என்ன தெரியுமா..?


சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் அமைந்துள்ள சோட்டே அமபால் கிராமத்தை சேர்ந்தவர் தம்ருதர் பாகேல் ( 25 ) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுனிதா காஷ்யப் (19) என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 


எனவே அந்த பெண்ணுக்கும் இவருக்கும் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 


திருமணத்தன்று மணமேடையில் மணமகன் அமர்ந்திருக்க, சுற்றி அவரது நண்பர்கள், உற்றார் - உறவினர்கள் இருந்துள்ளனர். அப்போது அதே மணமேடையில் திடீரென ஆண் ஒருவர் ஏறினார். திருமண நிகழ்வில் அவரை சரியாக யாரும் கண்டிராத நிலையில், தனது கையில் மறைந்து வைத்திருந்த ஆசிட்டை மணமகன் மீது சட்டென்று வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


தொடர்ந்து ஒரு கும்பல் மணமகனை காப்பற்ற முற்பட, மற்றொரு கும்பல் ஆசிட் வீசிய நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த ஆசிட் வீச்சால் மணமகன் மட்டுமின்றி அங்கிருந்த உறவினர்கள் சுமார் 10 பேர் மீது ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது. 


தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 


இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 


மேலும் அசிட் வீச்சு நடந்த இடத்துக்கு சென்றும் விசாரித்தனர். அப்போது அது ஒரு பெண் என்று தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண் யாரென்று விசாரிக்கையில் அது மணமகனின் முன்னாள் காதலி என்று தெரியவந்தது. 


 அந்த பெண்ணிடம் ஆசிட் வீச்சுக்கான காரணத்தை போலீசார் கேட்டபோது, மணமகன் தம்ருதரும், அந்த பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் திடீரென வீட்டில் பார்க்கும் பெண்ணை தம்ருதர் திருமணம் செய்ய எண்ணி, இந்த பெண்ணை தவிர்த்து வந்துள்ளார். 


இவர் எவ்வளவு கெஞ்சியும் தம்ருதர் கண்டுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தம்ருதரை பழிவாங்க எண்ணியுள்ளார். அதன்படி அவர் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ஆசிட் பாட்டிலை திருடி, திருமணம் நடைபெறும் அன்றே அனைவர் முன்பும் ஆண் வேடத்தில் மணமேடையில் ஏறி, தம்ருதர் மீது ஆசிட் வீசியுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது. 


இதைதொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.