Header Ads



கோட்டாபயவை ஜனாதிபதியாக்கி செய்த தவறு, ரணில் ஜனாதிபதியானதால் திருத்தப்பட்டுள்ளது


கடந்த 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்ததன் மூலம் தாம் “தவறு” செய்ததாக சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒப்புக்கொண்டுள்ளது.


எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்ததன் மூலம் அப்பிழை திருத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, அடுத்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன போட்டியிட்டு வெற்றிபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


கோட்டாபய ராஜபக்சவின் கீழ் சுகாதார அமைச்சராகவும் போக்குவரத்து அமைச்சராகவும் பவித்ரா வன்னியாராச்சி செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.