Header Ads



பள்ளிவாசல் நிர்வாகங்களே, வாய்ப்பு வழங்குங்கள்


ரமழான் மாத ஆரம்பத்தில் மஜாலிஸுத் திக்ர் என்ற ஒரு முகநூல் பக்கத்தில் அல்ஜீரிய நாட்டு இளம் ஹாபிழ் காரீ ஒருவர் தராவீஹ் தொழுகையில் ஸூரத் யூஸுஃப்ஐ மிகவும் உணர்வு பூர்வமாக அழகாக ஓதுவதனை கண்டேன்.

அவர் அரபுநாடுகளில் இடம் பெறும் சர்வதேச திலாவத் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும், அவர் கெளரவிக்கப்பட வேண்டும் என நானும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.


தொடர்ந்து அவரது குர்ஆன் திலாவத்களை கேட்டு வந்தேன், அவரது முதலாவது பதிவு அரபு உலகில் வேகமாக வைரலாகியது.


அவர் ஒரு பல்கலைக் கழக மாணவராம், பெயர் அப்துல் அஸீஸ் ஸுஹைம்! #سحيم


அல்ஜீரியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் முஸீலா மாவட்டத்தில்  நஸ்ர் குத்ப் பெரிய பள்ளிவாயலில் தராவீஹ் கியாமுல் லைலிற்காக திரண்டனர்.


ஐக்கிய அரபு இராச்சிய அஜ்மான் ஆளுனர், ரமழான் கடைசி தினங்களில் அங்கு மஸ்ஜித் ஆமினா குரைர் பெரிய பள்ளியில் தொழுகை நடாத்த விருந்தினராக அழைத்திருந்தார்.


நாடு திரும்பியதும் முஸீலா மாகாண ஆளுநர் உற்பட அரச அதிகாரிகள் ஏற்பாட்டில் அவர் கெளரவிகாகப் படுகிறார், அவரது தாய் தந்தையர் உம்ரா செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கினர்.


அவரது தந்தை ஒரு ஹாபிஸ் ஆலிம் மூன்று ஆண் பிள்ளைகளையும் ஹாபிஸ்களாக ஆலிம்களாக உருவாக்கியுள்ளார், எல்லோரும் இனிமையான குரல் வளம் உள்ளவர்கள், முத்த மகன் முஹம்மத் ஸுஹைம் கத்தாரில் இமாமாக பணி புரிகிறாராம்.


அல்குர்ஆனை மனனமிடுவதும், தஜ்வீத் தர்தீல் முறையில் இனிமையாக ஓதுவது இலகுவாக காரியம், ஆனால் அதனை முறையாக விளங்கி, கற்று உணர்வுபூர்வமாக இக்லாஸுடன் புரிந்து ஓதும் பொழுது அது உள்ளங்களை ஆகர்சிப்பதாக அவர் கூறுகிறார்.


எமது ஊர்களிலும் குரல்வளம் உள்ள ஹாபிஸ்கள் ஆலிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு இமாமத் செய்கின்ற அதான் செல்லுகின்ற சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவை இடுகிறேன் !

#سحيم

#مجالس_الذكر   

#عبد_العزيز_سحيم


 - Inamullah Masihudeen -




No comments

Powered by Blogger.