Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - இரகசியங்களை வெளியிடத் தயாராகும் கத்தோலிக்க திருச்சபை


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத இரகசிய தகவல்களை வெளியிட கத்தோலிக்க திருச்சபை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் பேராயர் மாநாட்டில் வழங்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியாகாத ரகசிய தகவல்கள் அடங்கிய சிடி ஆய்வு செய்யப்படவுள்ளது.


வழக்கறிஞர்கள் மற்றும் கிறிஸ்தவ அறிஞர்கள் குழுவுடன் சேர்ந்து இது தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுக்குப் பிறகு, பேராயர்கள் பேரவையில் அறிக்கை வெளியிடப்படும் என தகவல் தெரியவந்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாகவும், அதில் உள்ள விடயங்கள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதலை விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் சில தொகுதிகள் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியமான விடயங்களைக் கொண்டிருப்பதாகக் கூறி பகிரங்கப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டன.


மேலும் முழுமையான அறிக்கையை வழங்குமாறு கத்தோலிக்க திருச்சபை பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.


அதற்கமைய, ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில், முழுமையான அறிக்கை கடந்த 2ஆம் திகதி பேராயர் பேரவையின் தலைவர் ஹெரால்ட் அந்தோனி ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.