Header Ads



தற்போதைய ஆட்சியாளர்கள் குறித்து, மெல்கம் ரஞ்சித் விடுத்துள்ள எச்சரிக்கை


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நேர்ந்த நிலையே தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் எச்சரித்துள்ளார்.


கொழும்பில் இன்று (17.04.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச வீடு செல்ல நேரிட்டது என அவர் சு
ட்டிக்காட்டியுள்ளார்.


தற்போதைய ஆட்சியாளர்களும் கோட்டாபயவின் வழியையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்களையோ அல்லது உண்மைகளையோ மூடி மறைக்க முயற்சித்தால் தற்போதைய ஆட்சியாளர்களும் வீடு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இன்னமும் பதவியில் நீடித்திருப்பதாகவும் அவ்வாறான அரசாங்கத்துடன் தொடர்பாட முடியாது எனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. கர்தினால் மெல்கம் அவர்கள் உண்மையையும் நியாயத்தையும் பேசிக் கொண்டே இருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த உண்மைகள், நியாயங்கள் இந்த காதுகளில் ஏற்கனவே முத்திரை பதிக்கப்பட்ட ஆட்சியாளர்களின் காதுகளில் ஒருபோதும் விழாது.எனவே பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அந்த மந்தி(ரி)களை பெரிய குழியொன்று தோண்டி அதில் தள்ளவிடவேண்டியதுதான். அப்போது நாடும் அங்கோலா லெபனானின் தரத்தை ஏற்கனவே எட்டியிருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.