Header Ads



ஓமான் முதலீட்டாளரை தாக்கிய குண்டர்களை கைது செய்


நாட்டில் நான்கு வருடங்களாக முதலீடு செய்து 300 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிய ஓமான் முதலீட்டாளர் மீது நீர்கொழும்பில்  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசியல்வாதி ஒருவரின் குண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன் குற்றவாளிகள் கைதாகி ஒரு நாளில் பிணையில் விடுதலை ஆகியுள்ளனர். 

எனவே நாட்டுக்கு முதலீடு தேவைப்படும் இத்தருணத்தில் இவ்வாறு முதலீட்டாளர்களுக்கு தாக்குதல் நடத்தினால் எவர் நாட்டுக்கு முதலீடு செய்ய வருவர். மத்திய கிழக்கு அரபுநாடுகள் இலங்கையுடன் வலுவான உறவை பேணும் நாடுகளாகும். இவ்வாறான தாக்குதல்கள் இந்த உறவுமுறையில் விரிசலை ஏற்படுத்தலாம். 


இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் செயலாகும்.இதனை சும்மா விடகூடாது. எனவே இந்த குண்டர்களை வழிநடத்தும் அரசியல்வாதி யார்? தாக்கப்பட்ட ஓமான் நாட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் தருவாயில் குற்றவாளிகள் எப்படி ஒரு நாளில் பிணையில் வெளியே வரமுடியும்?. ஆகவே இது தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என அசோக அபேசிங்க எம்பி பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.