Header Ads



ரமழான் இறுதி நாட்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் - பள்ளிவாசலுக்குச் சென்ற அறிவுறுத்திய பொலிஸார்


இன்று (ஏப்ரல் 18, 2023), அஸர் தொழுகையின் பின்னர் அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிக்கு வருகை தந்த கண்டி ASP மற்றும் அலவதுகொட பொலிஸ் OIC ஆகியோர் ரமழான் இறுதி நாட்களில் அக்குறணையில் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்ற தகவல் தங்களுக்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தனர்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினால் முடிந்த ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஊர் மக்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.


இதன் அடிப்படையில், எதிர்வரும் சில நாட்களுக்கு ஊரில் பின்வரும் ஒழுங்குகளை கடைபிடிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


01. அவரவருடைய ஊரிலுள்ள பள்ளிகளில் தொழுது கொள்ளுதல்.


02. பள்ளிகளுக்கு அந்தந்த ஊர்வாசிகள் மாத்திரம் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல். (ஆண்கள், பெண்கள்)


03. மஸ்ஜிதுகளுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தி வைக்க அனுமதிக்காதிருத்தல்.


04. அக்குறணை பஸார் சம்பந்தப்படுகின்ற மஸ்ஜித்களில் பெண்கள் இரவுத் தொழுகைக்கு வருவதை முடிந்நளவு தவிர்த்துக் கொள்ளுதல்.


05. முக்கிய தேவைகள் இல்லாவிட்டால் பஸாருக்கு வருவதை தவிர்த்தல்.


06. பஸாரிலுள்ள கடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள, அந்தந்தக் கடை உரிமையாளர்கள் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.


07. ஊரில், பைக்குகளில் (Motorbikes) இளைஞர்கள் தேவையற்ற வகையில் சுற்றித் திரிவதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுதல். இன்று முதல் பெருநாள் வரை அவ்வாறு நடந்து கொள்கின்றவர்களுக்கு சூட்டிங் ஓடர் (Shooting Order) வழங்கப்பட்டிருப்பாத பொலிஸார் தெரிவித்தனர். எனவே, உங்களது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.


08. இந்த விடயம் சம்பந்தமாக சமூக ஊடகங்களில் கருத்துப் பரிமாறிக் கொண்டிருப்பதை முற்றாகத் தவிர்த்து, தங்களது குடுமபத்தினரது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


09. ஊரில் சந்தேகத்திற்கிடமான யாராவது நடமாடுவதைக் கண்டால், பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவித்தல்.


மேலுள்ள அறிவுறுத்தல்கள் ஊர் ஐமாஅத்தார்கள் சகலரும் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும், மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் இதனை கண்காணிக்குமாறும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.


அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனம்

ஏப்ரல் 18, 2023


 Akurana News

No comments

Powered by Blogger.