Header Ads



மைத்திரிபாலவின் புலம்பல்


ஏனையவர்களின் தவறுகள் காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிறிசேன, குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஒரு விடயம், ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் என்றார்.


காலக்கெடுவிற்கு முன்னர் இழப்பீட்டை வழங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து தற்போது நிதி திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.


. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு முன்னாள் அதிகாரிகள் 2019 ஏப்ரலில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை முன்னரே புலனாய்வுத் தகவல்கள் பெற்றிருந்தும் தடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்தது.


2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 311 மில்லியன் ரூபாவை வழங்குமாறு பிரதிவாதிகள் மற்றும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.