Header Ads



தகவல்களை பகிர வேண்டாம்


எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் திட்டமிடப்பட்ட சுற்றுப்பயணங்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் திருட்டு மற்றும் வீடுகளுக்குள் புகுந்து திருடுவதற்கு இவ்வாறான தகவல்களை பயன்படுத்த கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


எனவே, வீட்டுக்கு வெளியில் இருக்கும் இடம் போன்ற முக்கியமான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.


அதேநேரம் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் சிசிடிவி கருவிகளை இயக்கவும், கொள்ளை சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

1 comment:

  1. ​பொதுமக்களின் நன்மைக்காக பொலிஸ் பாதுகாப்புத்துறை பொது மக்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள் அவர்களின் காதுகளில் விழுமா? என்பது தான் கேள்விக்குறி. இந்த நாட்டு மக்கள் பாதுகாப்புத் தறையினரின் அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றினால் பெரும்பாலானகுற்றச் செயல்கள் நடப்பதைத் தவிர்த்திருக்க முடியும். அதனால் பலநூறு உயிர்களும் அநியாயமாக இழப்பதையும் தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.