Header Ads



சிங்களப் பெண்ணை திருமணம் செய்த, தமிழர் வைத்த புத்தர் சிலையை காணவில்லை


- க அகரன் -

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப்பகுதியில் தற்போது வசித்துவரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (09) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது அன்று மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் தானே அரச காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிஸில் இன்றைய தினம் (10) குறித்த நபர் முறையிட்டுள்ளார்.


அந்த நபர் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருகைதந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண்ணொருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்துக்கு வந்து தங்கியுள்ளார்.


இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்பாக உள்ள அரச காணியில் வைத்துள்ளார். அந்த சிலையே காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.