Header Ads



எதிர்க் கட்சிகளின் ஏகோபித்த, ஆதரவுடன் இம்தியாஸுக்கு முக்கிய பதவி


அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பாரிய சக்தியாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பல எதிர்க்கட்சிகள் இன்று -24- முன்முயற்சி எடுத்துள்ளன. 


தற்போதைய அரசியல், பொருளாதார,சமூகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அமுல்படுத்தும் தன்னிச்சையான வேலைத்திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பல எதிர்க்கட்சிகள் இன்று (24) பாராளுமன்றத்தில் ஒன்று கூடின.


அரசாங்கம் கொண்டு வரவுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டமூலங்கள் இந்நாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் எனவே எதிர்க்கட்சிகள் அவற்றிற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது தெரிவித்தார்.


இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில்  பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,டலஸ் அழகப்பெரும,ரவூப் ஹக்கீம், மனோ கணேசன்,லக்ஸ்மன் கிரியெல்ல,இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர்,சந்திம வீரக்கொடி, கலாநிதி நாலக கொடஹேவா, உதய கம்மன்பில,கலாநிதி ஹர்ஷ டி சில்வா,வீரசுமண வீரசிங்க,கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,தயாசிறி ஜயசேகர,கெவிது குமாரதுங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இது தொடர்பில் சட்டரீதியாகவும்,தேசிய ரீதியாகவும்,சர்வதேச ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாகார் இந்த எதிர்க்கட்சி அரசியல் கட்சி ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.