Header Ads



நோர்வே கப்பலில் சட்டவிரோத கச்சா எண்ணெய் பெற்ற விவகாரம் - நைஜீரியாவில் 8 இலங்கையர்கள் விடுதலை


நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த நோர்வே நாட்டுக்குச் சொந்தமான 'MT Heroic Idun' கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை நைஜீரிய நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த கப்பலில் 3 மலையாளிகள் உட்பட 16 இந்தியர்கள், 8 இலங்கையர்கள், மற்றும் போலந்து, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவின் கடற்படையினரால் கச்சா எண்ணெய் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments

Powered by Blogger.