Header Adsதனது 5 உறுப்புகளை தானம் செய்த மாணவன் - தாயாரின் இறுதிச் சடங்குகளின் பின் சம்பவம்


விபத்துக்குள்ளாகி மூளைச்சாவு அடைந்த மாணவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

குருநாகல் தெமட்டலுவ பிரதேசத்தை சேர்ந்த மலியதேவ பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர் பிரவீன் பண்டாரவின் உடல் உறுப்புகள் ஆபத்தான நோயாளிகளுக்கு தானம் செய்வதற்காக நேற்று -03- குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


உயிரிழந்த பிரவீன் தனது தாய், தனது இளைய சகோதரன் மற்றும் சகோதரியுடன் உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​வீரம்புகெதர பகுதியில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் பிரவீனின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பிரவீனின் அண்ணன் முகத்தில் காயம் ஏற்பட்டு பற்கள் சேதமடைந்ததுடன், சகோதரியின் கை முறிந்து காயம் ஏற்பட்டது.


இவர்கள் அயலவரின் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதுடன் அவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆனால் விபத்தில் தலையில் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனை சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் அவருக்கு சிகிச்சை அளித்த நிபுணர்கள் மூளைச்சாவு அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.


மூளைச்சாவு அடைந்த பிரவீனின் உடல் உறுப்புகளை தீவிர நோயாளிகளுக்கு தானமாக வழங்கலாம் என பிரவீனின் தந்தையிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தந்தை தொழிலில் மரப்பொருட்கள் உற்பத்தியாளர் மற்றும் தாய் ஒரு இல்லத்தரசியாகும்.


அதற்கமைய, பிரவீனின் தந்தையின் விருப்பத்திற்கமைய, நேற்று பிரவீனின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண் சவ்வுகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளுக்கு மாற்று சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டன.


பிரவீனின் தாயாரின் இறுதிச் சடங்குகள் நடந்த அடுத்த நாள் இந்த உடல் உறுப்புக்கள் தானம் இடம்பெற்றுள்ளது.


குருநாகல் வடமேற்கு றோயல் கல்லூரியில் ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிரவீன், அந்த பெறுபேறுகளின் அடிப்படையில் ஆறாம் ஆண்டில் மலியதேவ கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.


சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளுடன் சித்தியடைந்த அவர், விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்க கடந்த வருடம் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.


படிப்பில் சிறந்து விளங்கிய பிரவீன், இசையில் தனது திறமையால் சிறுவயதிலேயே இசை தொடர்பான தேர்வில் தேர்ச்சி பெற்றார். பிரவீன் மெல்லிசை குரல் கொண்ட திறமையான பாடகர். யூடியூப் சேனலில் அவரது பல பாடல்கள் தற்போது பிரபலமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. இந்த இழப்பையும் அதனால் இந்த சிறுவனின் குடும்பத்துக்கு குறிப்பாக தந்தை, சகோதர சகோதரிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான கவலையும் சோகமும் இருக்கும் போது தாயை அடக்கம் செய்த அடுத்த நாள் இந்த சிறுவனின் உடலுறுப்புகள் குறைந்தது ஐந்து மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற வழங்கப்படுகின்றது. அதற்கு அவருடைய தந்தை ஒப்புதல் கொடுத்திருக்கிறார். தாயைப் பிரிந்த சோகம் அப்படியே இருக்கும் போது அடுத்தவர்களின் உயிரைக் காப்பாற்றும் அந்த தந்தையின் பரந்த மனதைப் பாருங்கள். இந்த ஆழமான மனிதநேயம் மிகவும் பாராட்டத்தக்கது மட்டுமல்ல இதுபோன்ற மனிதநேயம் இந்த நாட்டு முஸ்லிம்களிடம் இல்லை என்ற செய்தியையும் மிகவும் கவலையுடன் தெரிவிக்க வேண்டும். யாராவது அது பிழையென வாதிடலாம். அவர்களிடம் நான் மிகவும் மரியாதையாக வேண்டிக் கொள்வது இந்த நாட்டின் எந்த மூளையிலிருந்தாவது ஒரு முஸ்லிம் சுகவீனமற்று மூளைச் சாவு அல்லது அவர் இனி பிழைப்பதில்லை என்ற டாக்டர்களின் ஏகோபித்த கருத்தின் பின்னர் அவருடைய உடலுறுப்புகளை தானம் செய்ய அவருடைய குடும்பம் எங்கேயாவது முன்வந்திருக்கின்றதா என்றால் பதில் இல்லை என்பதைத்தவிர வேறு பதில்கள் இல்லை. ஒரு தாகித்த நாய்க்கு நீர் பருகக் கொடுத்த ஒரு விபசாரியை அல்லாஹ் சுவர்க்கத்துக்கு அனுப்புகின்றான், ஒரு பூனையை உணவு கொடுக்காது தடுத்து அது இறந்த காரணத்தால் அந்த பூனைக்கு உணவைத்தடுத்தவர் முஸ்லிமாக இருந்தபோதிலும் நரகம் செல்லுகின்றார் என்ற நபிமொழிகளை நாம் நாளாந்தம் குத்பாக்கள், காதின் மென்சவ்வு வெடிக்க கத்தும் பயான்களிலும் அடிக்கடி கேட்டு மறந்திருக்கின்றோம். ஆனால் அந்த வாய்ப்பு பெரும்பான்மை சமூகத்துக்கு இல்லை. 'நபியே! பல உலகங்களுக்கு நாம் அருட்கொடையாக ரஹ்மத்தாக அனுப்பியிருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அந்த நபியைப் பின்பற்றும் முஸ்லிம்களிடம் அந்த நபியிடம் இருந்த அருளும் ரஹ்மத்தும் இருக்கின்றதா என கேட்டால் பதில் திருப்தியில்லை. இந்த அருமையான ரஹ்மத் நிறைந்த இந்த அருள் நிரம்பிய ரமலான் மாதத்தில் நாம் அனைவரும் மனஉறுதியை ஏற்படுத்திக் கொள்வோம். மற்ற மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் நிச்சியம் அதனைப் பரிபூரணமாகப் பயன்படுத்தி இறைவனின் அருளைப் பெற்றுக் கொள்ள மனஉறுதி கொள்வோம்.

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் இந்தப் பிள்ளை, அவருடைய தாய், தகப்பன் குடும்பத்தின் பாவங்களை மன்னித்து அவர்களில் காலம் சென்றவர்களை சுவனத்தில் சோ்ப்பாயாக. எங்கள் பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக.

    ReplyDelete

Powered by Blogger.