Header Ads



யாழ்ப்பாணத்தில் இருந்து 50 டொலரோடு கனடா சென்றவர், இன்று கோடீஸ்வரரான இரகசியம்


1969ஆம் ஆண்டு கொழும்பில் பிறந்து யாழ். பருத்திதுறையில் வளர்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையை எதிர்பாராத விதமாக இலங்கையில் நடந்த யுத்தம்,  அவரது வாழ்கையையும் விட்டுவைக்கவில்லை.


17 வயதில் கைது செய்யப்பட்டு ஓர் முகாமில் பல மாதங்களாக சித்திரவதையை அனுபவித்துள்ளார்.


இலங்கையில் தனது பிள்ளைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்காது என்ற பெற்றோரின் பயம் அதிகரிக்க 1988ஆம் ஆண்டு வெறும் 50 டொலர்களுடன் தனது பிள்ளையை கனடாவிற்கு அனுப்பி வைக்கிறார் அந்த சிறுவனின் தந்தை.


வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒன்றும் அறியாத அந்த சிறுவன். இன்று கனடாவில் பிரபலமான நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும், தொழிலதிபராகவும் மற்றும் நூலாசிரியராகவும்  திகழ்கின்றார்.


இவரை பற்றி தெரிந்து கொள்வது என்றால் இவர் எழுதிய Prisoner #1056 என்ற நூல் பற்றி அறிந்துகொள்வதும் கட்டாயமாகும், இலங்கையில் வாழும் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி உலக தமிழர்கள் அனைவரும் இவரை பற்றி அறிந்து வைத்திருப்பது தவறில்லை.


இலங்கையில் சிறைச்சாலையில் இருக்கும் போது #1056 என்ற இலக்கத்தில் தனது அடையாளத்தை தொலைக்க இருந்த அவர் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை கொண்டுள்ளார். அவர்தான் ரோய் ரட்ணவேல்.

No comments

Powered by Blogger.