ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை துவங்கியது
ஜேர்மனியில், 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை திங்கட்கிழமை முதல் துவங்கியுள்ளது. இந்த செய்தியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் மற்றொரு செய்தியும் உள்ளது.
ஜேர்மனி முழுவதும் செல்லத்தக்க 49 யூரோ பயணச்சீட்டு விற்பனை ஏராளமானோரை ஈர்த்துள்ளது. பல மில்லியன் ஜேர்மன் பயணிகள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில அலுவலகங்கள் அதை பயன்படுத்திக்கொள்கின்றன.
ஜேர்மனி முழுவதும் பல பணியாளர்களுக்கு ஏற்கனவே தள்ளுபடி விலை பயணச்சீட்டுகள் கிடைக்கின்றன. சில அலுவலகங்கள் என்ன செய்கின்றன என்றால், மொத்தமாக பயணச்சீட்டுகளை வாங்கி, அவற்றை மேலும் தள்ளுபடி விலையில் தங்கள் பணியாளர்களுக்கு வழங்குகின்றன.
பணியாளர்களை குஷிப்படுத்துவது ஒருபக்கம், மறுபக்கம், மொத்தமாக வாங்குவதால் பயணச்சீட்டுகள் அலுவலகங்களுக்கு சற்று குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆக, மாதம் ஒன்றிற்கு 34.30 யூரோக்கள் அல்லது அதைவிட குறைவான விலைக்கு பயணச்சீட்டைக் கொடுக்கிறார்கள் பணி வழங்குவோர் சிலர்.
Post a Comment