Header Ads



3 முஸ்லிம் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவிப்பு -

செளதி அரேபியா, இராக், குவைத் உள்ளிட்ட பல நாடுகள் திடீரென எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்துள்ளன.


செளதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு ஐந்து லட்சம் பீப்பாய்கள் குறைக்கிறது.


இராக் உற்பத்தியை 2,11,000 பீப்பாய்கள் குறைக்கிறது.


உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பிறகு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.


பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.


உலகின் பல பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகள் திடீரென எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.


ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை வர்த்தகத்தின் தொடக்கத்தில் பீப்பாய்க்கு 5 டாலர்கள் வரை உயர்ந்தது. அதாவது, சுமார் 7 சதவிகித அதிகரிப்புடன் பீப்பாய் ஒன்றின் விலை 85 டாலர்களை எட்டியது.


செளதி அரேபியா, இராக் மற்றும் பல வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு பத்து லட்சம் பீப்பாய்கள் வரை குறைக்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தன. இந்த அறிவிப்பால் சர்வதேச எண்ணெய் சந்தையில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.