Header Ads



இலங்கை முழுவதும் தமிழருடையது - நிரூபிக்கத் தயார் எனவும் சவால் - 2 நாடுகளை அழைக்கவும் கோரிக்கை


அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய தொல்பொருள் ஆய்வாளர்களை நாட்டிற்கு அழைத்தால் இந்த நாடு முழுவதும் தமிழர்களுடையது என்பதை நிரூபிக்கமுடியும் என்று தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது.


புதுவருடதினமான இன்று -14- வவுனியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட சிங்களவர்களால் கொண்டுவரப்படும் அனைத்துமே தமிழர்களிற்கு எதிரானதுதான்.


2009 இல் தமிழர்கள் அழியும்போதும் காணாமல் ஆக்கப்படும்போதும் சிங்கள மக்கள் மௌனமாக இருந்தார்கள்.அதனை ஆதரித்தார்கள். தற்போது இந்துகோவில்கள் தாக்கப்படும்போதும் அவர்கள் மௌனமாகவே இருக்கின்றனர். இதுவே இந்த நாட்டின் நிலைக்கு காரணம்.


எனவே ஐரோப்பிய அமெரிக்க உதவிகளுடன் பொதுவாக்கெடுப்பின் மூலம் ஒரு இறையாண்மையான தேசத்தை பெறுவதே தமிழ்மக்களின் இருப்பிற்கான தற்போதைய தேவை.


அத்துடன் தமிழ் ஊழல் அரசியல் வாதிகளை அகற்றி இளைஞர்களின் பங்களிப்புடனான ஒரு புரட்சி ஏற்ப்படும் போதுதான், எமக்கான தீர்வுகிடைக்கும் அதற்கான சூழல் ஏற்ப்பட்டுவருகின்றது.


அத்துடன் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை.


தமிழர்பகுதிகளில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னால் இருப்பவர் ரணிலே. 2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.


இலங்கையின் நீதித்துறை ஒரு நகைச்சுவையாக உள்ளது.இந்து கோவில்கள் மீதான ரணிலின் அடக்குமுறையை தடுப்பதற்கு எவரும் உதவ மாட்டார்கள். எனவே இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் முன்செல்ல முடியும்.


அதன்மூலம் முழுத்தீவும் தமிழர்களுடையது என்பதை நிரூபிக்க முடியும். அந்தவகையில் அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த தீவு யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டுவர வேண்டும். இந்தத் தீவின் உரிமையாளர்கள் தமிழர்களே , சிங்களவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.என்றனர்.


1 comment:

  1. ஆம் நல்ல யோசனை, அமெரிக்க தடய நிபுணர்களைக் கொண்டுவந்து ஆய்வு செய்து இலங்கை தமிழர்களின் சொத்து என உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் பதிவுசெய்து தடய ஆதாரங்களைச் சரியாக முன்வைத்தால் இலங்கை யாருக்குச் சொந்தமானது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். அப்போது பெரிய இந்தியாகவுக்குப் பக்கத்தில் உள்ள மிகச் சிறிய தீவு என்றவகையில் அது இந்தியாவின் சொத்து என ஏகமனதாக தீர்மானிக்கப்படும். அப்போது மோடியின் ஆட்சியின் கீழ் ஸ்டாலினின் நேரடியான ஆட்சியின் கீழ் வறுமை இன்றி நாடு சிறப்பாக இருக்கும். அதையாவது கெட்டித்தனமிருந்தால் செய்து காட்டுங்கள். இந்த 2245 அட்டையைத் தூக்கித் திரிவதை யாரும் கண்டு எந்த நடவடிக்ைகயும் எடுக்கப் போவதில்லை. இந்திய பாஸ்ட்போர்ட் இருந்தால் கச்சதீவுக்கும் இலவசமாகப் போய்வரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.