Header Ads



ஸஹ்ரானின் தோட்டத்தில் புதையல் உள்ளதா..? STF இனர் கைது, பூசகர் தப்பியோட்டம்


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளத்திலுள்ள தோட்டம் ஒன்றில் புதையல் தோண்டிய இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (19.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை குறிப்பிட்டுள்ளது.


சோதனை நடத்தப்பட்டபோது, புதையலைப் பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அவரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் விசேட அதிரடைப் படையினர் அறிவித்துள்ளனர்.    TW

1 comment:

  1. சஹ்ரான் என்பவன் ஒரு கன்ரக்ட் காரன், அவனுக்கு ஒரு தோடமோ மண்ணாங்கட்டியோ இல்லை. இப்போது கதையைத் திசை திருப்ப பல புது புது கதைகளைச் சோடிக்கின்றார்கள். இந்த நாடகங்கள் இறுதியாக இந்த அநியாய படுகொலை செய்ய நபர்களை மூடிமறைக்க சோடிக்கப்படும் கதைகள். இவற்றுக்கான மிகச் சரியான தண்டனையும் கூலியும் இறைவனிடம் மாத்திரம் தான் கிடைக்கும். அது தவிர இந்த உலகில் கதைகளுடன் கதைகள் முடிவடையும். ஆனால் அந்த அந்த அத்தனை நாடகங்கள் உண்மைச் சம்பவங்களின் சரியான பதிவுகளும் டேடாக்களும் அந்த ரப்பிடம் மறுமைநாளில் மிகச் சரியாக சமர்ப்பிக்கப்படும் போது மாத்திரம் அனைவரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். அதுவரை நாம் பொறுமையாக இருப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்த அநியாயத்தில் பலியானவர்களுக்கும் நியாயத்தையும் அவர்களுடைய உரிமைகளையும் மிகப் பரிபூரணமாகக் கொடுப்பதற்கு மிகவும் பொறுத்தமானர்களும் அந்த ரப் மாத்திரம் தான். அது நிச்சியமாக மிகச் சரியாக நடைபெறும்.

    ReplyDelete

Powered by Blogger.