Header Ads



திறக்கப்படவுள்ள அலுமாரிகள், IMF கடன் பணம் எங்கு வைப்பிடப்படும்..? மக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்


 சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மூலம் இலங்கைக்கு பல கதவுகள் திறக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியை எவ்வாறு பெறுவது என்பது தொடர்பில், கருத்து தெரிவிக்கும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


“இலங்கையுடனான இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் உடன்படுகிறோம் என அடுத்த முடிவாக சர்வதேச நாணய நிதியம் ஒரு அறிவிப்பை வெளியிடும். அதன் பிறகு முதல் தவணை வெளியாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


முதல் கட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சுமார் 300-350 மில்லியன் டொலர் பெறுவோம் என்று நினைக்கிறேன்.


சர்வதேச நாணய நிதியத்தின் பணம் வேறு எங்கும் செல்ல முடியாது. இலங்கை மத்திய வங்கியின் கையிருப்புகளுக்கு நேரடியாக செல்கிறது. அவர்களின் கையிருப்பு அதிகரிக்கும் போது, ​​எங்கள் கடன் வகைப்பாடு அதிகரிக்கிறது.


அங்கிருந்து, நாம் பல கதவுகளைத் திறக்கலாம். அவை கடன் பணம் என்ற போதிலும், பணத்துடனான பல அலுமாரிகள் திறக்கப்படும்.


தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஒரு ரூபாய் கடன் கூட வாங்க முடியாதென சூழலில் கிடைக்கும் இந்த பணம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


மக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும். பொதுவாக டொலரின் விலை 300 ரூபாய்க்கு அருகில் வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.