Header Ads



வியப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி


வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதை கனடாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஜேர்மனி விரும்புகிறது. 


வெளிநாட்டு திறன்மிகுப் பணியாளர்களைக் கவர்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்காக, ஜேர்மன் பெடரல் உள்துறை அமைச்சரான Nancy Faeserம், தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heilம், வரும் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்குச் செல்ல இருக்கிறார்கள்.


அவர்கள் தொழிலாளர் சந்தை கொள்கைகள், புலம்பெயர்தல் மற்றும் பொது பாதுகாப்பு ஆகிய விடயங்கள் குறித்து கற்றுக்கொள்வதற்காக, கனேடிய அமைச்சர்களுடன் பல சந்திப்புகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.


ஒரு வெற்றிகரமான நாட்டின் மிகப்பெரிய பொறுப்புகளிலிருக்கும் பெடரல் அமைச்சர்கள், தாங்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என கருதும் ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்வதற்காக மற்றொரு நாட்டுக்கு பயணிக்க இருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது.  

1 comment:

  1. இது தான் முன்னேற்றத்தின் இரகசியம். கனடாவிலிருந்து கற்றுக் கொள்ள முன்னேற்றமடைந்த ஜெர்மனி நாட்டு இரண்டு அமைச்சர்கள் கனடா செலகின்றனர். ஆனால் இலங்கை எந்த ஒரு நாட்டிலிந்தும் கற்றுக் கொள்வதில்லை. ஜெர்மனி, கனடா, ஐ. அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் எவ்வாறு முன்னேறியுள்ளன அந்த முன்னேற்றத்தின் இரகசியம் என்ன என்பதை பார்க்க நாம் தயாராக இல்லை. வெறுமனே 2.5 கோடி மக்களைக் கொண்ட வடகொரியா தற்போது 34 கோடி மக்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு எதிராக போராடி அந்த நாட்டை அழிப்பதற்குத் தயாராக இருப்பது போர்க் கொடி தூக்கியுள்ளது அதன் இரகசியம் என்ன என தேடிப் பார்க்க நாம் தயாராக இல்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் வரட்சி காரணமாக இலட்சக்கணக்கான ஹெக்டர் பயிர்ச்செய்கை அழிந்து போனது, அதன் காரணமாக அங்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் உலகில் எந்த நாடுகளிலிருந்தும் உணவு உதவிகளைப் பெற அந்த நாட்டு அரசாங்கம் தயாராகஇல்லை. ஐ.நாடுகள் நிறுவனத்திலிருந்து மாத்திரம் உதவியைப் பெற்றுக் கொள்ளும். வேறு எந்த நாடுகளின் தனிப்பட்ட உதவிகளையும் வடகொரியா நிராகரிக்கும். அதன் இரகசியம் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளத் தயாராக இல்லை. அங்கு யுத்தத்துக்குத் தயாராக 12 இலட்சம் படையினர் தயார் நிலையில் இருக்கின்றார்கள். ரிசேவ் படையில் 8 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கும் போது ஐ.அமெரிக்காவில் ஒன்றரைக் கோடி படையினர் இருக்கும் போது 20 இலட்சம் படை தயார்நிலையில் இருக்கும் போது அதை எதிர்க்க வடகொரியாவின் 12 இலட்சம் படையால் எவ்வாறு சாத்தியமாகும் என்ற இரகசியத்தையும் நாம் விளங்கிக் கொள்ளத் தயாராக இல்லை. எனவே இலங்கை முன்னேறும் எந்த ஒரு படித்தரத்திலும் இல்லை. ஏதாவது ஒரு அரசாங்கம் முன்னேற்றத்தை நோக்கி்ச் செல்கின்றது எனக்கூறினால் அது பச்சப் பொய்யும் புளுகளும் மாத்திரம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.