Header Ads



இலங்கைக்கு கடன் வழங்குவது தாமதம்..?


சீனாவுடன் இருதரப்புக் கடன்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்படும் வரை இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் திட்டத்தில் ஈடுபட முடியாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் திட்டத்தில் வெற்றியடைவதற்கு, இலங்கையின் கடன்களுக்கு குறைந்தது 10 வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு சீனா உடன்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த தகவலை தெரிவித்துள்ளார்.


தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தில் ஈடுபடுவது இவ்வருடம் ஒகஸ்ட் அல்லது செப்டெம்பர் வரை தாமதமாகலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. இந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தேவையில்லை. சாதாரணமாக செய்திகளை அன்றாடம் வாசிக்கும் சாதாரண வாசகர்களுக்கும் விளங்கும் உண்மைதான். ரணில் செய்யும் தந்திரங்கள்,மந்திரங்களை வைத்து ஐஎம்எப் ஒருபோதும் கடன் வழங்காது. கொடுத்த கடனுக்குப் பதிலாக கொழும்பில் உள்ள மிக முக்கியமான கட்டடங்களை உரிமையாக்கிக் கொள்ள சீனாவும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தது. எனவே கடன் விடயத்தில் சீனா இலங்கையின் அல்லது ஐம்எப்பின் அறிவுறுத்தல்களை ஒருபோதும் பின்பற்றாது. எனவே எதிர்பார்த்த கடன் ஒருபோதும் கிடைக்காது. அதன் இறுதிவிளைவு தற்போது வட கொரியாவின் நிலைதான் இலங்கைக்கும் வரும். உண்ண உணவின்றி பட்டனியால் மக்கள் செத்துமடிகின்றனர். ஆட்சியாள சர்வாதிகாரியான அந்த மொட்டன் அவனுடைய ஆட்சிக்கு யாராவது சவாலாக அமைந்தால் உடன் அவனை அவர்களை கொலைசெய்துவிடுவான் பிரச்சினை முடிந்துவிட்டது.. அந்தப் போக்கில் தான் ரணிலும் செல்வதாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.