Header Ads



மாமனுக்கு வாய்த்த மருமகன்


- Nadarajah Kuruparan -


உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தலுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் திறைசேரிக்கும், நிதி அமைச்சிற்கும் உத்தரவிட்டிருந்தது. 


அதற்கமைவாக திறைசேரியும், நிதி ராஜாங்க அமைச்சும் நிதியை விடுவிக்க தயார் என அறிவித்ததோடு நிதி விடுவிப்பு பத்திரத்தை நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறது.


ஆனால் இலங்கையின் தற்போதைய நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார். அதனால் நிதி விடுவிப்பிற்கான பத்திரத்தில் கையொப்பமிடாது விடின் அல்லது அதனை காலதாமதப்படுத்தினால் நீதிமன்றம் நிதி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கு கட்டளை வழங்கவோ அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ முடியாது. 


இந்த நிலையில் மீண்டும் ஒரு முறை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற சிறப்புரியைின் ஊடாக ஏற்கனவே நீதித் துறை மீது தாக்குதல்களை தொடுத்திருக்கிறார்கள்.


அவ்வாறே ஜனாதிபதி ரணி்ல் விக்கிரமசிங்கவும் “தற்போது நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள பொருளதாரப் பிரச்சனைகளுக்கு அனைத்து நீதிபதிகளும் வந்தாலும் அவர்களால் தீர்வுகாண முடியாது” என விமர்சித்திருந்தார்.


ஆக, நிறைவேற்றுத் துறையும், ஆளும் தரப்பின் பெரும் பான்மையை கொண்டிருக்கும் சடத்துறையும் நீதித்துறையை சவாலுக்கு உட்படுத்தி உள்ளன.


அதனால் தேர்தலுக்கான பணம் கிடைக்காமையினால் மீண்டும் தேர்தல் தள்ளிப் போவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.


நிறைவேற்றுத் துறைக்கும் (ஜனாதிபதி) நீதித் துறைக்கும், சட்டத் துறைக்கும் (நாடாளுமன்றம்) இடையிலான மோதல்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய விடயங்கள் அல்ல.


1984ல் 2 ஆவது தடவையாக நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்ட ஜே.ஆர் ஜெயவத்தனா (ரணில் விக்கிரமசிங்கவின் மாமன்) அப்போது பிரத நீதியரசராக இருந்த நெவில் சமரக்கோனை (Neville Samarakoon) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் ஊடாக பதவி நீக்கினார். 


அது மட்டுமல்லாது, ஜே ஆரின் ஆதரவாளர்கள் பிரதம நீதியரசரசர் நெவில் சமரக்கோனின் வீட்டிற்கு கல்லெறிந்து அவருக்கு நெருக்குதல்களை கொடுத்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.


இவ்வாறே பிரதம நீதியரசராக இருந்த ஷராணி பண்டாரநாயக்காவை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்ம்  2013, ஜனவரி 13ல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பதவி நீக்கியிருந்தது.


ஆனால்  மாமன் ஜே.ஆர் ஜெயவர்த்தனவும், உறவினர் மகிந்த ராஜபக்ஸவும் நீதித்துறையோடு நேரடியாக மோதியதைப் போன்று ரணில் மோதப் போவதில்லை, அது அவரது வழிமுறையும் அல்ல. 


இலங்கையின் பாதுகாப்பு, நிதி, நிர்வாகத்தை தன் நிறேவற்று அதிகாரத்தால் சுற்றி வளைத்துள்ள ரணில் அரசியல் யாப்பினூடும், அரசியல் சட்டங்களினூடும், தனக்களிக்கப்பட்ட வரப்பிரசாதங்களினூடும், நாடாளுமன்ற பெரும்பான்மையோடும் நீதிதுறைக்கு சவால் விடுவதனை 2024 ஜனாதிபதி தேர்தல்வரை தவிர்க்க முடியாது என்பதுவே நிஜம் என நம்புகிறேன். 

No comments

Powered by Blogger.