பொலன்னறுவை கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் மாநாடு
பொலன்னறுவை கட்டுவன்வில ஜம்மியத்துல் உலமா சபையால் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் வெலிகந்த பிரதேச அனைத்து உலமா சபையின் ஒத்துழைப்போடு கட்டுவன்வில பெரிய ஜும்மா பள்ளிவாசலில் உலமா சபையின் தலைவர் அஷ் ஷேஹ் அலியார் மஜீதி தலைமையில் மகாநாடு நடத்தப்பட்டது.
இந்த மகாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், தாவா பேச்சாளருமான அஷ்ஷேஹ் ரிஸ்வி மஜீதி அவர்களும், மருத முனை தாருல் ஹுதா அரபிக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷேஹ் முபாரக் மதனி அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கட்டுவன்வில, சேனபுர, அத்துக்கல ,குடாபொக்குண ஆகிய ஊர்களில் இருந்து ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தார்கள்.
jawfer jp



Post a Comment