Header Ads



மாலைத்தீவிடம் மன்னிப்புக் கேட்ட அமைச்சர் ஹரீன்


சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார் .


“அழகான மாலத்தீவுகள் தொடர்பாக பெர்லினில் நான் கூறிய கருத்து, சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவில் அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் ஏதேனும் அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்று பெர்னாண்டோ ட்வீட் செய்துள்ளார்.


ஜேர்மனியில் பெர்லினில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மாலத்தீவுகள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் கடும் எதிர்ப்பை அவருக்கு ஏற்படுத்தியுள்ளன


ஜேர்மனியில் உரையாற்றிய பெர்னாண்டோ,


மாலத்தீவுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. “நிறைய மக்கள் மாலத்தீவுக்கு செல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். மாலத்தீவுக்கு கடற்கரை இருக்கிறது . ஆனால் நீங்கள் ஐந்து நாட்கள் அங்கேயே இருந்தால் உங்களுக்கு அலுத்துவிடும். அவ்வளவுதான். என்று அவர் கூறினார்.


அமைச்சரின் கருத்துக்கு அரசியல்வாதிகள் மற்றும் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் உட்பட மாலத்தீவு மக்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்


“நிச்சயமாக உங்களால் நீந்தவோ, டைவ் செய்யவோ, பல்லுயிர்ப் பன்மை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவோ அல்லது குறைந்தது 4 ஆயிரம் ஆண்டுகளாக அமைதியுடன் இருக்கும் நாகரிகத்தின் மீது ஆர்வம் இல்லாமலோ இருந்தால், ஆம், 5 நாட்களில் நீங்கள் சலிப்படைவீர்கள்! என இதற்கு ஐநாவின் முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் அகமது ஷஹீத் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.


இதேவேளை மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஷிஃபாவ், இலங்கை சுற்றுலா அமைச்சரை தனது நாட்டுக்கு சென்று உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பலை அனுபவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். “நான் இலங்கை சுற்றுலா அமைச்சரை மாலத்தீவுக்கு அழைக்கிறேன் மற்றும் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பலை அனுபவிக் க அழைக்கிறேன் மற்றும் வண்ணமயமான பவளத் தோட்டங்கள் கொண்ட வெள்ளை மணல் மற்றும் செழுமையான நீலக் கடலை அனுபவிக்க அழைக்கிறேன் . உங்களுக்கு போதுமான நேரம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று ஷிஃபாவ் ட்வீட் செய்துள்ளார்.


இதையடுத்து அமைச்சர் ஹரின் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.