Header Ads



மீண்டும் பிரேரிக்கப்பட்டுள்ள ஹர்ஷ


வெற்றிடமாகியுள்ள பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை மீண்டும் பிரேரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் நேற்றைய(01) கூட்டத்தின் போது, இந்த பிரேரணை கட்சித் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம ஏற்பாட்டாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.


அனைத்து எதிர்க்கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், இந்த பிரேரணை தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கூடவுள்ள அனைத்து கட்சிகளினதும் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அனுமதியை பெற வேண்டியுள்ளது.


கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர்களை அந்தந்த குழுக்களின் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தெரிவு செய்கின்ற போதும், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடனே அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் நியமனம் இடம்பெறுகின்றது.


ஆளும் கட்சியினரின் பிரேரணைக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.