Header Ads



கபூரிய்யா விவகாரத்தில் தலையிட்ட நீதிபதி, மீண்டும் வந்தது மின்சாரம், முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு நன்றி


கபூரிய்யா அரபுக் கல்லூரியில் துண்டிக்கப்ட்டிருந்த மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 07ம் திகதி இரண்டாம் முறையாக கல்லூரிக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதை யாவரும் நன்கறவோம். கல்லூரிக்கான மின்சாரத்தினை நம்பிக்கையாளர்களின் வேண்டுகோளின் பிரகாரம் துண்டிக்கப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டதும், அதனை மீளப்பெருவதற்கான அனைத்து முயற்சிகளும் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ப்பட்டதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்ற சனிக்கிழமை (11-03-2023) வக்பு நியாய சபையில் கல்லூரியின் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எமது தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட விஷேட பிரேரனையை செவிமடுத்த நீதிபதி கல்லூரிக்கான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கியினை உடன் மேற்கொள்ளுமாரும் உரிய தரப்பிற்கு எழுத்துமூல அறிவித்தலை வழங்குமாரும் வக்பு நியாய சபை செயலாளரை வேண்டினார்.


கபூரிய்யா அரபுக் கல்லூரியில் துண்டிக்கப்ட்டிருந்த மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.


கடந்த 07ம் திகதி இரண்டாம் முறையாக கல்லூரிக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதை யாவரும் நன்கறவோம். கல்லூரிக்கான மின்சாரத்தினை நம்பிக்கையாளர்களின் வேண்டுகோளின் பிரகாரம் துண்டிக்கப்ட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டதும், அதனை மீளப்பெருவதற்கான அனைத்து முயற்சிகளும் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ப்பட்டதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


சென்ற சனிக்கிழமை (11-03-2023) வக்பு நியாய சபையில் கல்லூரியின் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எமது தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட விஷேட பிரேரனையை செவிமடுத்த நீதிபதி கல்லூரிக்கான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கியினை உடன் மேற்கொள்ளுமாரும் உரிய தரப்பிற்கு எழுத்துமூல அறிவித்தலை வழங்குமாரும் வக்பு நியாய சபை செயலாளரை வேண்டினார்.


கல்லூரிக்கான மின்சராம் துண்டிக்கப்பட்டதன் விளைவாக அங்கு மீறப்பட்டுள்ள அடிப்படை உரிமை குறித்தும், ஏழை மாணவர்கள் விடயத்தில் இந்த நம்பிக்கையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாததையும் கண்டித்து தனது தரப்பு வாதத்தை முன்வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விற்கு எமது கல்லூரி அதன் மாணவர்கள் மற்றும பழைய மாணவர்கள் உட்பட  சமூகத்தின் சார்பாக அனைவரினது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


எமது கல்லூரியின் விவகாரங்களில் என்றும் எம்மோடு கைகோர்த்திருக்கும் சிரேஷ்ட சட்டததரனிகளான என்.எம்.ஷஹீத், ருஷ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரனி சபீனா மஹ்ரூப், ஷிபான் மஹரூப் ஆகியோருக்கும் எமது விஷேட நன்றிகள்.


சென்ற 03ம் திகதி முதற்தடவையாக கல்லூரிக்கான மின்துண்டிக்கப்பட்டதிலிருந்து இன்று (13-03-2023) மின்இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளும்வரை மிகவும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயல்பட்ட முன்னால் ஆளுனர் ஆஸாத் ஸாலிஹ் அவர்களுக்கும் எமது கல்லூரியினதும் அதன் மாணவர்கள் மற்றும் பழைய  மாணவர்களினதும் மற்றும் எமது சமூகத்தினதும் விஷேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


மல்லூரிக்கான மின்இணைப்பை அதன் நம்பிக்கையாளர்களே மனிதாபிமானமற்ற முறையில் துண்டித்தமையினை சமூக மயப்படுத்தி மக்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்வதற்கு பலவகையிலும் எமக்கு ஒத்துழைப்பாக இருந்த ஊடகங்கள் சமூக வளைத்தளங்கள் அச்சு, இலத்திரன, மற்றும் டிஜிடல் ஊடகங்கள் அனைத்துக்கும் எமது கல்லூரி சார்பாகவும் அதன் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.