இன்டர்நெட் யுகத்தில் ஓர் மகான், தனது மகனுக்கு செய்த அறிவுரை
அறிந்து கொள்! கூகுல், ஃபேஸ்புக், டுவீடர், வாட்ஸாப், யூடியூப் மற்றும் அனைத்து வகை சமூக வளய தளங்களும் ஆழ் கடல் போன்றதாகும்.
அதிலே பெரும் தொகை மனிதர்கள் மாண்டு போயுள்ளனர்.
பல ஆண்களின் மாண்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
அதன் பலத்த அலைகள் இளம்பெண்களின் ஒழுக்கத்தை விழுங்கிக் கொண்டுள்ளன.
அதிலே நீ நுழைந்தால் நீ தேன் பூச்சி போல இருந்து கொள்!
நீ முதலில் பயன்பெறுவதோடு மற்றவர்களுக்கு பயனளிக்க வேண்டுமெனில் நல்ல பக்கங்களில் மாத்திரம் அமர்ந்து நின்று பயன்பெற்று விடு!
கண்டதிலெல்லாம் சென்று அமர்ந்து அறியா வண்ணம் நோய்களை பரபரப்பும் ஈக்கள் போல இருந்து விடாதே!
🙏 அன்பு மகனே!
இன்டர்நெட் என்பது கூட்டம் நிறைந்த பரபரப்பான ஒரு பெரும் உலகச் சந்தை.
அதில் யாரும் இனாமாக தனது பொருள்களை வழங்கப் போவதில்லை.
எல்லோரும் பிரதிபலனை எதிர்பார்த்து நிற்பார்கள்.
மார்க்க நெறிமுறைகளை தகர்த்தெறியக்கூடியவர்களும் இருப்பார்கள்.
மனித விழுமியங்களுக்கு பங்கம் விளைவிப்பவர்களும் இருப்பார்கள்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை திணிப்பவர்களும் உள்ளனர்.
பிரபலத்தை விரும்பும் வேடதாரிகளும் இருப்பார்கள்.
மாற்றத்தை விரும்பும் சீர்திருத்தவாதிகளும் இருப்பார்கள்.
எனவே நன்றாக பொருளை பரிசோதனை செய்யும் வரை எதனையும் கொள்முதல் செய்யாதே!
மர்மமான மற்றும் சந்தேகத்திற்கிடமான இனையதள முகவரிகளை திறந்து பார்ப்பதை உனக்கு கடுமையாக எச்சரிக்கிறேன்!
அவைகளில் அதிகமானவை மடக்கிப் பிடிக்கும் பொறியாகும்.
அழித்தொழிக்கும் கண்ணி வெடியாகும்.
அழிவும் நாசமும் நிறைந்த தீமைகளின் அச்சாணியாகும்.
மின்னணு ஊடுருவல்களும், தகவல் திருட்டுக்களுமாகும்.
🙏 அன்பு மகனே!
நீ பதிவிட, பின்னூட்டமிட அல்லது பகிர்வதற்கு முன்னர், அது இறைவனுக்கு திருப்த்தியளிக்குமா? அல்லது அதிருப்தி அளிக்குமா என்று சிந்தனை செய்துவிடு!
செய்தி வட்டாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்த முன்னர் எதனையும் பகிர்வதை உனக்கு கடுமையாக எச்சரிக்கிறேன்.
வதந்திகளையும், புனையப்பட்ட கதைகளையும் பகிர்வதை உனக்கு நான் எச்சரிக்கிறேன்! சட்டவிரோதமான, அனுமதியற்ற, மற்றும் தீமை விளைவிப்பவைகளை நகலெடுத்து வெட்டி ஒட்டி பதிவதை கடுமையாக எச்சரிக்கிறேன்!
மனிதர்களை அவர்கள் பதிவிடுவதை வைத்து கணக்கிடதே!
அதிகமானவர்கள் அலங்கரிக்கப்பட்ட வாசகங்களைக் கொண்டும், போலியான பிம்பங்களைக் கொண்டும், மறைமுகமான பண்புகளைக் கொண்டும் முகமூடி அணிந்து வேடம் தரித்து நிற்பவர்கள்தான்.
🙏 அன்பு மகனே!
சமூக வலயதளங்களில் உனது நன்நெறிமுறைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதே.
நீ புனைப் பெயரில் இருந்தாலோ, அல்லது தெரியாத முகமாக இருந்தால் கூட, யாவற்றையும் நன்கறிந்த இறைவனானவன், ரகசியங்களையும், ஒளிவு மறைவுகளை நன்கு அறிந்தவன்.
🙏 அன்பு மகனே!
உன்னை புண்படுத்துபவனை நீ ஒரு போதும் புண்படுத்தாதே!
நீ உன்னை மக்கள் மன்றத்தில் முன்னிலைப் படுத்துகிறாய், அவன் அவனை மக்கள் மன்றத்தில் முன்னிலைப் படுத்துகிறான்.
நீ உனது குணாதிசயங்களை முன்னிலைப் படுத்துகிறாய், அவன் அவனது குணாதிசயங்களை முன்னிலைப் படுத்துகிறான்.
சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்!
🙏 அன்பு மகனே!
உன் பதிவுகளில் இறைவனை அஞ்சிக்கொள் ஏனெனில் நீ எழுதுவதை, பகிர்வதை வானவர்களும் பதிந்து வைத்துக்கொள்கிறார்கள். (பகிர்பவனும் பதிபவன் போன்றவன்தான்)
அந்த ஆண்டவன் மேலிருந்து கணக்கிட்டு கண்காணிக்கிறான்.
🙏 அன்பு மகனே!
இன்டர்நெட் எனும் அகோரக் கடலில் உனக்கென நான் அஞ்சும் மிகப்பெரிய அச்சம் என்னவெனில் கெட்ட காட்சிகளையும் தீய படங்களையும் இழிவான நடனங்களை கண்டு கழிப்பதாகும்.
இத்தடைகளை நீ தாண்டி வந்தால் உனக்கும் உனது சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் அதைப் பயன்படுத்திக்கொள்.
மத விழுமியங்களையும், அறநெறிகளையும் அறிவியல் உண்மைகளையும் பரப்புறை செய்வதில் முயன்றுபார்.
தடைசெய்யப்பட்ட பாவங்கள் எனும் சேற்றில் உன்னை நீ மூழ்கக் கண்டால், வேட்டையாடும் காட்டு மிருகத்திடம் இருந்து நீ விரண்டோடுவது போன்று விரண்டோடி வந்துவிடு!
இல்லாவிடில் நரக பாதாளமே உனது தங்குமிடமாக மாறிவிடும்.
உன் நாயகனே நாளை உனக்கெதிராக வாதிடுவான்.
🙏 அன்பு மகனே!
சைத்தான் உள்நுழையும் வாயல்களில் மிகப்பெரியது மனோஇச்சையும் கவனமின்மையுமாகும். அவ்விரண்டுமே இன்டர்நெட்டில் தூண்களுமாகும்.
எனவே இந்த ஊடகம் மூலம் உன்னை நீ கட்டியெழுப்பிக் கொள்!
உன்னை உடைத்து தகர்க்கக் கூடிய ஊடகமாக ஆக்கிவிடாதே!
உனக்கு ஆதரவான சாதனமாக அதை ஆக்கி விடு!
உனக்கு பாதகமான சாதனமாக ஆக்கிவிடாதே!
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment